மதியம் 1 மணி நிலவரப்படி குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?

தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது.
மதியம் 1 மணி நிலவரப்படி குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள் எவை..?
Published on

சென்னை,

நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ளநிலையில், மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 56.81 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. முன்னதாக 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் 39.61 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. (வித்தியாசம்: 16 சதவீதம் அதிகம்)

இந்த நிலையில், திருப்பூர் - 62.97 சதவீதம், நாமக்கல் - 62.51 சதவீதம், ஈரோடு - 61.79 சதவீதம், சேலம் - 61.42 சதவீதம், கரூர் - 60.77 சதவீதம் ஆகிய 5 இடங்களில் மதியம் 1 மணி நிலவரப்படி அதிக வாக்குபதிவுகள் பதிவாகி உள்ளன. ஆனால் மதியம் 1 மணியாகியும் ஒருசில இடங்களில் குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது. அதன் விவரம் தற்போது வெளியாகி உள்ளது.

குறைவான வாக்குகள் பதிவான மாவட்டங்கள்:-

கன்னியாகுமரி : 50.35 சதவீதம்

நீலகிரி : 50.42 சதவீதம்

நெல்லை: 50.73 சதவீதம்

ராமநாதபுரம்: 51.54 சதவீதம்

தூத்துக்குடி: 52.55 சதவீதம்

X

Daily Thanthi
www.dailythanthi.com