செல்போன் பேசி கொண்டிருந்தபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி

பாடி அருகே செல்போன் பேசி கொண்டிருந்தபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்து ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்
செல்போன் பேசி கொண்டிருந்தபோது பாலத்தில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி
Published on

போடி அருகே உள்ள முந்தல் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). ஆட்டோ டிரைவர். நேற்று  இரவு இவர், முந்தல் மேலபரவு சாலையில் உள்ள கழிவுநீர் ஓடை பாலம் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் கால் தவறி திடீரென கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து பிரபாகரனின் தந்தை கருப்பையா கொடுத்த புகாரின் பேரில், போடி குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com