தடுப்புசுவர் இல்லாத பாலம்

குடிமங்கலம் குடிமங்கலம் அருகே ராமச்சந்திராபுரத்தில் தடுப்பு சுவர் இல்லாத பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்புசுவர் இல்லாத பாலம்
Published on

உயர்மட்ட பாலம்

குடிமங்கலம் ஒன்றியத்தில் முக்கிய நீர் ஆதாரமாக விளங்குவது உப்பாறு ஓடை. குடிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான ஊராட்சிகளின் வழியாகவே உப்பாறு ஓடைசெல்கிறது. உப்பாறு ஓடடையின் வழியாக தண்ணீர் செல்லும் போது குடிமங்கலம் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்கிறது. இதன் காரணமாக விவசாயிகள் கிணற்றுப்பாசனம் மூலம் காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். உப்பாறு ஓடை வழியாக செல்லும் தண்ணீர் கடைசியாக உப்பாறு அணைக்கு செல்கிறது. உப்பாறு அணை மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் நிலம் நேரடியாக பாசன வசதி பெறுகிறது. இதுதவிர ஆயிரக்கணக்கான ஏக்கர்

நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது.உப்பாறு ஓடையின் குறுக்கே பல இடங்களில் தரை பாலமும் உயர் மட்ட பாலமும் கட்டப்பட்டுள்ளன.

சீரமைக்க கோரிக்கை

உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் தடுப்புச் சுவர் உடைந்து காணப்படுகிறது. மேலும் பாலத்துக்கு அருகில் எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. இரவு நேரங்களில் வாகனம் உங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் இரு புறங்களிலும் கரைப்பகுதியில் மழை நீர் தேங்கி விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பாலத்தின் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் அடிப்பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் தேங்கி கிடக்கிறது. நீர் வழித்தடத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com