தூத்துக்குடியில் பணியின் போதுதவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

தூத்துக்குடியில் பணியின் போது தவறி விழுந்த கட்டிட தொழிலாளி இறந்து போனார்.
தூத்துக்குடியில் பணியின் போதுதவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு
Published on

தூத்துக்குடி தேவர் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் முத்துராமலிங்கம். இவருடைய மகன் பேச்சிமுத்து (வயது 38). கட்டிட தொழிலாளி. இவர் தேவர் காலனியில் உள்ள புதிதாக நடந்து வரும் வீடு கட்டும் பணியில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு, கட்டிடத்தின் மேல் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த பேச்சிமுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com