சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராக சுழற்ற வேண்டும் - கிருஷ்ணசாமி பேட்டி

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்தது எளிதாக கடந்து செல்லக் கூடியது அல்ல என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சிங்காநல்லூர்,

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக, பல்வேறு அரசியல் அமைப்புகளும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. இதனை கண்டித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, நேற்று தனக்குத்தானே சவுக்கடி கொடுத்து, தி.மு.க. ஆட்சிக்கு எதிர்ப்பினை தெரிவித்தார். இதுகுறித்து கோவையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய சாட்டையை, பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிரான மக்களின் கோபத்தை மடை மாற்றம் செய்வதா? இந்த ஆட்சியில் நடக்கும் ஒவ்வொரு அவலங்களையும் மக்களிடத்தில் எடுத்துச் சொல்லி மக்களின் மனங்களை ஆட்சி மாற்றத்திற்காக சூடேற்றுவதற்கு பதிலாக, அவற்றை தணிக்கும் வகையில் செயல்படக்கூடாது.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்தது எளிதாக கடந்து செல்லக் கூடியது அல்ல. தி.மு.க. ஆட்சியில் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்டும் வகையில் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும். சாட்டைகளை ஆட்சியாளர்களுக்கு எதிராக சுழற்ற வேண்டும். மக்களின் போராட்டங்களை மழுங்கடிக்க மடைமாற்றம் செய்ய சுழற்றக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com