தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை: இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது

நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
வெள்ளை அறிக்கை, vijay
Published on

சென்னை,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 17-வது சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய், முதல்-அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். த.வெ.க. அரசு ஆட்சி அமைந்தவுடன் தமிழகத்தின் கடன் ரூ.10 லட்சம் கோடியை கடந்திருப்பதாகவும், நிதி நிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) மாலை 5.30 மணிக்கு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன், வெள்ளை அறிக்கையை வெளியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக நிதி நிலை தொடர்பான வெள்ளை அறிக்கையில், முந்தைய ஆட்சியாளர்களின் நிதி விரயம் தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com