புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் யார்.. யார்..? - பட்டியல் வெளியீடு

மக்கள் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.
புதிதாக பதவியேற்க உள்ள அமைச்சர்கள் யார்.. யார்..? - பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

கடந்த 4-ந் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்கக் கூடிய அளவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. த.வெ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைத்தாலும், அக்கட்சியினால் அரசை அமைக்க இயலவில்லை. இதனால் ஆட்சி அமைக்க த.வெ.க.வுக்கு கவர்னர் வாய்ப்பு வழங்கவில்லை.

தி.மு.க. கூட்டணியில் இருந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல். ஆகியவை த.வெ.க.விற்கு ஆதரவளித்தன. எனவே ஆட்சி அமைக்கும் அளவுக்கு த.வெ.க.வுக்கு பலம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து கடந்த 10-ந் தேதி த.வெ.க.வின் தலைவர் விஜய் முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.

அவருடன் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடராமன், நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 அமைச்சர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். முதல்-அமைச்சர் உள்ளிட்ட 10 அமைச்சர்களுக்கும் கடந்த 16-ந் தேதியன்று துறைகள் ஒதுக்கப்பட்டன. என்றாலும், வனத்துறை, வேளாண்மை, வருவாய், வீட்டுவசதி, கூட்டுறவு, குறு சிறு நடுத்தர தொழில்கள் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்தது.

த.வெ.க. மற்றும் காங்கிரஸ், எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டு, தமிழக அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த அமைச்சரவை விரிவாக்கத்திற்கான அழைப்பிதழை தலைமைச் செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்டார். அதில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான மக்கள் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில், தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் இணையவுள்ளதாக மக்கள் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தூத்துக்குடி எம்.எல்.ஏ. ஸ்ரீநாத், அவிநாசி எம்.எல்.ஏ. கமலி, குமாரபாளையம் எம்.எல்.ஏ. விஜயலட்சுமி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

அமைச்சர்கள் பட்டியல்:-

1.ஸ்ரீநாத் (தூத்துக்குடி தொகுதி)

2.கமலி.எஸ். (அவினாசி)

3.சி.விஜயலட்சுமி (குமாரபாளையம்)

4.ஆர்.வி.ரஞ்சித்குமார் (காஞ்சீபுரம்)

5.வினோத் (கும்பகோணம்)

6.ராஜீவ் (திருவாடானை)

7.பி.ராஜ்குமார் (கடலூர்)

8.வி.காந்திராஜ் (அரக்கோணம்)

9.பி.மதன் ராஜா (ஒட்டப்பிடாரம்)

10.கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)

11.எஸ்.ராஜேஷ்குமார் (காங்கிரஸ், கிள்ளியூர்)

12.எம்.விஜய் பாலாஜி (ஈரோடு)

13.டி.லோகேஷ் தமிழ்செல்வன் (ராசிபுரம்)

14.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் (சேலம் தெற்கு)

15.ரமேஷ் (ஸ்ரீரங்கம்)

16.பி.விஸ்வநாதன் (காங்கிரஸ், மேலூர்)

17.ஆர்.குமார் (வேளச்சேரி)

18.கே.தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)

19. வி.சம்பத்குமார் (கோவை வடக்கு)

20.ஜெ.முகமது பர்வாஸ் (அறந்தாங்கி)

21.டி.சரத்குமார் (தாம்பரம்)

22.என்.மரிய வில்சன் (ஆர்.கே.நகர்)

23.கே.விக்னேஷ் (கிணற்றுக்கடவு)

X

Daily Thanthi
www.dailythanthi.com