திருப்பரங்குன்றம் அருகே கிணற்றுக்குள் வாலிபர் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை

திருப்பரங்குன்றம் அருகே கிணற்றுக்குன் இறந்து கிடந்த வாலிபர் யார் என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் அருகே கிணற்றுக்குள் வாலிபர் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
Published on

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த விளாச்சேரி அய்யனார் கோவில் அருகே உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடப்பதாக திருநகர் போலீசிற்கு தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கிணற்றில் பிணமாக கிடந்தவர் குளிக்க சென்ற போது நீச்சல் தெரியாமல் தவறி விழுந்து இறந்து போனாரா? அல்லது யாராவது அடித்துக் கொன்று பிணத்தை கிணற்றில் வீசி சென்று விட்டார்களா? என்பது உடனடியாக தகவல் தெரியவில்லை. இறந்தவர் யார்? எந்த ஊர்? என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com