

சென்னை
அ.தி.மு.க.வின் புதிய அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க.வின் அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் உடல்நலக் குறைவால் கடந்த சில நாள்களுக்கு முன் உயிரிழந்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க.தலைமையகத்தில் புதிய அவைத் தலைவரை நியமிப்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில், அ.தி.மு.க.வின் 50வது பொன்விழா ஆண்டு அக்டோபர் 17ல் கொண்டாடப்பட உள்ளது. இதன் முன்னேற்பாடுகள், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.