எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்? - மாணிக்கம் தாகூர் கேள்வி

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இந்த விபத்திற்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்
Published on: 

சென்னை,

எதிர்க்கட்சி தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்? என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

கவலைக்குரியது

உத்தரப் பிரதேசத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வாகனத்திற்கு ஏற்பட்ட விபத்து அதிர்ச்சியளிக்கிறது! நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருக்கே பாதுகாப்பு உறுதி செய்யப்படாத சூழல் உருவாகியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. இது ஒரு சாதாரண விபத்து குறித்த கேள்வி மட்டுமல்ல; நாட்டின் உயரிய பொறுப்பில் உள்ள தலைவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்வி!

யார் தவறிழைத்தார்கள்?

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இதற்கு பொறுப்பேற்று பதிலளிக்க வேண்டும். என்ன நடந்தது? பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு இருந்ததா? எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பை உறுதி செய்வதில் யார் தவறிழைத்தார்கள்?

அமித் ஷா மௌனம் வேண்டாம்

ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பில் அலட்சியத்திற்கு இடமில்லை! அன்பு தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பு என்பது ஒரு தனிநபரின் பாதுகாப்பு மட்டுமல்ல; இந்திய ஜனநாயகத்தின் மாண்பையும் அரசியலமைப்பு பொறுப்பையும் காக்கும் கடமையாகும்.

அமித் ஷா மௌனம் வேண்டாம் — பதில் சொல்லுங்கள்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com