அடுத்த தலைமைச்செயலாளர் யார்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அடுத்த தலைமைச்செயலாளர் யார்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக தலைமைச்செயலளராக வெ.இறையன்பு பணியாற்றி வருகிறார். கடந்த 1988-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான இவர், ஜூன் 30-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இன்னும் ஓரிரு நாளில் அடுத்த தலைமைச் செயலர்யார் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தின் அடுத்த தலைமைச்செயலாளரை தேர்வு செய்வது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாக செயலாளர் சிவதாஸ் மீனா, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் உள்ளிட்டோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் ஓய்வு பெறுவதால் புதிய அதிகாரிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தலைமைச்செயலாளர், டிஜிபி தேர்வு தொடர்பாக உள்துறை செயலர் அமுதா தலைமையிலான குழு டெல்லி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com