இனி ‘தம்பி' என்று யார் கூப்பிடுவார்? தேவா மறைவு குறித்து எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்

நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இசையமைப்பாளர் தேவா நேற்று உயிரிழந்தார்.
தேவா இறுதிச்சடங்கிற்கு எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்
Published on: 

ராணிப்பேட்டை,

இசையமைப்பாளர் மற்றும் பாடகருமான தேவாவின் மறைவிற்கு எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான தேவா (வயது 75) நேற்று சென்னையில் காலமானார். நேற்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால், தேவா உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாகக் கூறினர். இந்த நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது. மனசுக்கேத்த மகராஜா என்ற திரைப்படத்தின் மூலம், 1986ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா.தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் தேவா. இசை உலகில் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்தி வந்த தேவா மறைவுக்கு அரசியல், திரைப்பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எம்.எஸ்.பாஸ்கர் இரங்கல்

'அப்போதும், இப்போதும், எப்போதும் கர்வம் துளியும் இல்லாமல் எல்லோரிடமும் சிரித்துப் பேசக்கூடியவர். சிறந்த பக்திமான். விபூதி,, குங்குமம் இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது. இறைவனை வணங்கினார்; இறைவனிடம் சென்றார். இறைவனாகவே ஆகிவிட்டார். இனி எப்போது அவரைப் பார்க்கப் போகிறோம்?

'தம்பி' என்று அவர் கூப்பிடுவதைக் கேட்கப் போகிறோம்? திரையில் கானா பாடலுக்கு அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் அண்ணன் தேவாதான். மிகச் சிறந்த மனிதரை இழந்திருக்கிறோம். அவரது குடும்பத்தினர் இந்தத் துயரத்தைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை இறைவன்தான் தர வேண்டும்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com