தமிழகத்தில் யார் ஆட்சி? கருத்துக்கணிப்புகள் குறித்து பியூஸ்கோயல் பதில்

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்று பியூஸ் கோயல் நம்பிக்கை தெரிவித்தார்.
 தமிழகத்தில் யார் ஆட்சி? கருத்துக்கணிப்புகள் குறித்து பியூஸ்கோயல் பதில்
Published on

தமிழ்நாடு, கேரளா, புதுவை, மேற்கு வங்காளம் உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.

இது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: என்றார். மேலும் பியூஸ் கோயல் கூறியதாவது: தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதில் சந்தேகம் இருந்திருந்தால் டெல்லியிலிருந்து, இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டேன்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com