மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைவது ஏன் - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.
மாற்றுக் கட்சியினர் தவெகவில் இணைவது ஏன் - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
Published on

மதுரை,

மதுரையில் மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நீட் நுழைவுத் தேர்வு குளறுபடியால் அது தேவையில்லை என்பதே எங்களின் எண்ணம். இத்தேர்வை மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. மாணவிகளின் கம்மல் துப்பட்டாவை கழற்று என சொல்கிறார்கள். வினாத்தாள்களை உங்களால் பத்திரமாக எடுத்து வர முடியவில்லை. கடந்த வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்.

அதிமுக - திமுக இருவரும் எதிராக இருந்து தேர்தலை சந்தித்துவிட்டு தற்போது, இருவரும் ஒன்று சேர நினைக்கின்றனர். தைரியம் இருந்தால் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கட்டும். முக.ஸ்டாலின், இபிஎஸ் சேர்ந்து திமுக குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர நினைத்தனர். இரு கட்சிகளும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர்.

குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், இரு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைக்கின்றனர். புதிதாக வருபவர்கள் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து வரவில்லை.

மதுரை மெட்ரோ மட்டுமின்றி, மதுரை கழிவு நீர் கால்வாய்கள் கொண்டு வர இரண்டு எம்பிக்களுடன் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அடிப்படை வசதி இன்றி மதுரை இருக்க காரணம் முன்னால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தான். இதனை சரி செய்ய ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com