

சென்னை
முதல்-அமைச்சர் விஜய் பட்டு வேட்டி, சட்டையில் வருவது ஏன்? என்பதற்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்து பேசினார்.
தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களை பிடித்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. முதல்-அமைச்சராக விஜய் பதவியேற்று கொண்டார். அப்போது அவர் கோட்-சூட்டில் காணப்பட்டார். பொதுவாக தமிழக அரசியல் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் வெள்ளை நிற வேட்டி, சட்டையை அணிந்து வரும் வழக்கம் வைத்துள்ளனர்.
எனினும், முதல்-அமைச்சர் விஜய் கோட்-சூட் அணிந்தது பேசுபொருளானது. பின்னர் வெள்ளை சட்டைக்கு மாறினார். சில சமயங்களில் பட்டு வேட்டி, சட்டையிலும் வருவார். இந்த நிலையில் சமீபத்தில், பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது முதல்-அமைச்சர் விஜய், கருநீல சட்டை அணிந்து வந்தது கவனம் பெற்றது.
பொதுவாக கோட்-சூட்டில் வலம் வரும் முதல்-அமைச்சர் விஜய், பிரதமர் மோடியின் சென்னை நிகழ்ச்சிகள் முழுவதும் கருப்பு நிறத்தை ஒருமித்த அடர் கருநீல சட்டை, பேண்ட் அணிந்திருந்தார். இந்த உடைத்தேர்வு தொடர்பாக விவாதம் ஏற்பட்டது.
இதுபற்றி ஐ.ஐ.டி. நிகழ்ச்சியில் த.வெ.க. தொண்டர்கள் சிலர், எங்கள் தலைவர் உடையிலேயே தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். தனது அரசியல் நிலைப்பாட்டை உணர்த்தும் குறியீடுதான் அது என்று கூறினர்.
இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழக அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்து பேசினார். அவர் கூறும்போது, முதல்-அமைச்சர் விஜய் வெள்ளிக்கிழமை மட்டுமே பட்டு வேட்டி, சட்டையில் வருவார். மற்ற நாட்களில் சாதாரணமாகத்தான் வருவார்.