தி.மு.க. மகளிர் அணி கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பியது ஏன்? துரைமுருகன் விளக்கம்

கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிவிட்டேன் என்று துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்
துரைமுருகன்
Published on

திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் மகளிர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி, துரைமுருகன் வருவதற்கு முன்னதாகவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாமதமாக வந்த பொதுச்செயலாளர் துரைமுருகனை வரவேற்க மகளிர் அணியினர் உட்பட யாருமே வெளியே வராத நிலையில், கட்சி நிகழ்ச்சிக்கு உள்ளே செல்லாமல், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளே இருந்த நிலையில், சோகமான முகத்துடன் துரைமுருகன் திரும்பிச் சென்றிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது குறித்து விளக்கம் அளித்துள்ள துரைமுருகன், கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் மகளிர் அணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com