பிரசார சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்


பிரசார சுற்றுப்பயண தொடக்க விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்காதது ஏன்? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
x

2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

நெல்லை,

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

சமீபத்தில் அதிமுக கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக கொடி பறந்தது. தொண்டர்கள் ஆர்வ மிகுதியால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். முதலில் தொண்டர்கள் ஒன்றிணைவார்கள். பிறகு மக்கள் ஒன்றிணைவார்கள். கரூர் கூட்டநெரிசலில் ஆளும் திமுக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து வருகிறது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி மக்கள் ஆதரவை இழந்துவிட்டது. சொத்துவரி மற்றும் மின் கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், தலைமைச் செயலக ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். 2026 தேர்தலில் திமுக அரசு மக்களிடம் தகுந்த பதிலைப்பெறும். எந்த கட்சி வெற்றிபெறும் என்று யார் சொன்னாலும் இறுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும்.

வருகிற 12-ந் தேதி திட்டமிட்டபடி தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் நடைபெறுகிறது. பீகார் தேர்தலில் அகில இந்திய தலைவர் ஜே.பி. நட்டா தேர்தல் பணி செய்து வருவதால் சுற்றுப்பயணம் தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை. மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் கலந்துகொள்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசும், காவல் துறையும் கொடுக்கும் அனுமதியின்படி சுற்றுப்பயணம் நடைபெறும். தவெக கொடி, பா.ஜனதா கூட்டத்தில் எப்போது பறக்கும் என்பதை இப்போது சொல்லமுடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story