என் மகன் தவெகவில் இணைந்தது ஏன்? அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் விளக்கம்

தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்
என் மகன் தவெகவில் இணைந்தது ஏன்? அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால் விளக்கம்
Published on

சென்னை,

2016, 2021 என தொடர்ந்து 2 தேர்தல்களில் அவிநாசி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் சபாநாயகர் தனபால், இம்முறையும் அதே தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்த்ததாக தெரிகிறது. ஆனால், தற்போது அந்த தொகுதியை பாஜகவுக்கு அதிமுக ஒதுக்கியது.

இதனால் தலைமை மீது அதிருப்தியில் உள்ள தனபால், ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆட்சியைக் காப்பாற்றித் தந்த தனக்கே சீட் வழங்கவில்லை என வெளிப்படையாக பேசியிருந்தார்.

இந்த நிலையில், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள தனபால், 1988 ஆம் ஆண்டு சென்னையில் விபத்து ஏற்பட்ட போது, நேரில் வந்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா என புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அம்மாவின் அன்பு... என்றும் அம்மாவின் நினைவில்... எனக் குறிப்பிட்டு இருந்தார்

இந்தநிலையில், உடல் நலம் குன்றியிருக்கும் என்னை வந்து அதிமுக கட்சியினர் பார்க்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது. அந்த விரக்தியில்தான் என் மகன் தவெகவில் இணைந்தார். ஆனால், எனக்கு ஆதியும், அந்தமும் அதிமுகதான் என தனபால் கூறியுள்ளார்.

தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் தவெக சார்பில் ராசிபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com