முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன் ? கமல்ஹாசன் விளக்கம்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன் ? கமல்ஹாசன் விளக்கம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று சந்தித்தார். இந்த நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

என் அன்பிற்கினிய நண்பர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், துணை முதல்-அமைச்சர், பாசத்துக்குரிய தம்பி உதயநிதி ஸ்டாலினையும் தலைமைச் செயலகத்தில் இன்று நேரில் சந்தித்தேன்.

சுப்ரீம் கோர்ட்டில் சட்டப் போராட்டம் நடத்தி, கவர்னருக்குத் தன்னிச்சையாகச் செயல்படும் அதிகாரம் கிடையாது எனும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினைப் பெற்றமைக்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். மாநிலங்களின் உரிமையைக் காப்பதிலும், மாநில சுயாட்சியை வலியுறுத்துவதிலும், ஜனநாயகத்துக்கு வலிமை சேர்ப்பதிலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் சாம்பியனாகத் திகழ்கிறார் மு.க. ஸ்டாலின்.

அவரைக் கொண்டாட வேண்டியது என் கடமை. நம்    கடமை. என தெரிவித்துள்ளார் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com