உள்ளாட்சி தேர்தலை திமுக மறைமுகமாக நடத்தியது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்

உள்ளாட்சி தேர்தலை திமுக மறைமுகமாக நடத்தியது ஏன் என்று மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை திமுக மறைமுகமாக நடத்தியது ஏன்? மு.க.ஸ்டாலின் விளக்கம்
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுகவினர் ஒத்துழையாமை இயக்கம் நடத்தியதால் உள்ளாட்சி தேர்தலை மறைமுகமாக நடத்தியது திமுக. அதிமுகவினரால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதால் திமுக ஆட்சிக் காலத்தில் மறைமுகத் தேர்தல் நடந்தது.

அரசு விழாக்களை சிறிதும் நாணமின்றிப் முதலமைச்சர் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது. மக்கள் முன்னிலையில் பொய்யும், புரட்டும் பேசுவது முதலமைச்சர் யாசித்துப் பெற்ற பதவிக்கு அழகல்ல. அண்டப் புளுகு ஆகாசப் புளுகுகளை அவிழ்த்து விடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டுக்குள் வரவே முடியாமல் இருந்த நீட் தேர்வை, அதிமுக ஆட்சியில் முதலமைச்சரால் ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போனது பற்றி முதலமைச்சர் ஏன் பேசவில்லை? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com