தேசிய அளவில் மின் தேவை அதிகரிப்பு குறித்து மத்திய அரசு முன்கூட்டியே கணிக்காதது ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி

மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் காட்டி வாக்கு கேட்க முடியாத நிலைமைக்கு திமுக போய்விட்டது என அமைச்சர் நிர்மல்குமார் கூறியுள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி
Published on: 

சென்னை,

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருகை தருவதைக் கண்டு தவெகவினர் அஞ்சுவதாக திமுக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து, ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் பேசியதாவது:-

யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஒட்டுமொத்த தமிழக மக்களின் அன்பைப் பெற்ற முதல்-அமைச்சர் விஜய்யின் தலைமையில்தான் அடுத்த 30 - 40 ஆண்டுகள் ஆட்சி நடக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் காட்டி வாக்கு கேட்க முடியாத நிலைமைக்கு திமுக போய்விட்டது. மு.க.ஸ்டாலினையும் உதயநிதியையும் நம்பாமல், சேகர்பாபு போன்றோர் வேறு கட்சிகளில் சேர முடிவெடுத்திருக்கின்றனர். அதிமுகவிலும் இதே நிலைமைதான் என்றார்.

அதனை தொடர்ந்து, ராஜஸ்தானில் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ.46.09 செலவு என்பது மத்திய அரசின் பெரும் தவறு. தேவை விநியோக இடைவெளிகள் ஏன் முன்கூட்டியே கணிக்கப்பட்டு திட்டமிடப்படவில்லை? இதுகுறித்து மத்திய மின்சார அமைச்சகம் ஆராய வேண்டும்

இப்போதாவது தேசிய அளவிலான முன்னறிவிப்பு மாநிலங்களுடனான ஒருங்கிணைப்புக்கு திட்டமிட வேண்டும் என்று கூறினார்.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com