பார்ட்டி பண்ட் என்று சொன்னால் திமுகவினர் ஏன் எழுகிறார்கள்? ஆதவ் அர்ஜுனா கேள்வி

நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை. எங்கள் மீது விமர்சனங்கள் வரும் போது நாங்கள் பதில் சொல்கிறோம் என்று ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார்.
ஆதவ் அர்ஜுனா
Published on

தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான்கு நாட்களாக ஒரு முதல்வரை பார்த்து விமர்சனம் செய்தார்கள். எள்ளி நகையாடிய திமுகவை பார்த்து மரபு இல்லை என கேட்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் நங்கள் இதை பதிவு செய்தோம்.

கொளத்தூர் என சொல்லக்கூடாதா?

திருமாவளவன் மீது அன்பும் மதிப்பும் உள்ளது. நல்ல கருத்துகளை நாங்கள் வரவேற்போம். நான்கு நாட்களாக சட்டமன்றத்தில் நடைபெற்ற காட்சிகளை திருமாவளவன் பார்க்க வேண்டும். முதல்வர் குறித்து அவதூறான கருத்து என்ன பேசினர்கள் என்று பார்க்க வேண்டும். அப்புறம் முதல்வர் விஜய் பதிலளிக்கிறார். பேசு பேசு என்று சொல்கிறீர்கள். நான் பேசும் போது என்ன நடைபெற்றது. கொளத்தூர் என்பது சட்டப்பேரவையில் சொல்லக்கூடாத வார்த்தையா? ஏன் கொளத்தூர் தமிழ்நாட்டில் இல்லையா?

பதில் சொல்வோம்

நாங்கள் யாரையும் கிண்டல் செய்யவில்லை. எங்கள் மீது விமர்சனங்கள் வரும் போது நாங்கள் பதில் சொல்கிறோம். அரசியல் ரீதியாக பதில் சொல்ல வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். அவர்கள் அடித்துக்கொண்டே இருப்பார்கள்.நாங்கள் அமைதியாக இருக்க கூடிய பண்ணையார்த்தன அரசியலில் நாங்கள் இருக்க மாட்டோம். நாங்கள் அமைதியாக மரபுப்படி இருக்கிறோம். திமுக சொல்லக்கூடிய அனைத்து போலியான பிரசாரங்களுக்கு நாங்கள் பதில் சொல்வோம்.

அப்படித்தான் முதல்வர் பதில் சொன்னார். பதில் சொல்லும் போது அமைதியாக போயிவிட்டு.. பார்ட்டி ஃபண்ட் என்று மட்டும்தான் சொன்னார். திமுக பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னாரா? பார்ட்டி ஃபண்ட் என்று சொன்னவுடன் ஏன் திமுகவினர் எழுந்தனர். ஏனெனில் அவர்களுக்கு தெரியும். போன ஆட்சியில் எல்லா துறைகளிலும் வாங்கினார்கள்” என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com