

சென்னை,
சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் பதிலுரையில் பேசியதாவது:-
என்னை பொறுத்தவரைக்கும், சட்டமன்றத்தில் ஒவ்வொரு உறுப்பினரோட கேள்விக்கும் எல்லா நேரத்திலும் இடைமறித்து பேசுவது ஒரு தலைமைக்கு அழகல்ல. எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், பொறுப்பற்ற முறையில் பேசுவதும் சரியாக இருக்காது.
ஏனென்றால், நாம் இங்கு பேசுவது நமக்காக மட்டுமல்ல, எட்டு கோடி மக்களுடைய நலன்களை தீர்மானிப்பதற் காக. இந்த அடிப்படை புரிதல் நமக்கு இருக்கிறது. நான் எப்போதும் தயாராகி, என் மக்களுக்காக என் மனதில் பட்டதைப் பேசுகிறேன். அதே மாதிரி, கூட்டு பொறுப்பை உணர்ந்து அமைச்சர்கள் பதில் சொல்வது எல் லாம் ஆட்சியிலும் நடக்கிற ஒன்றுதான்.
அது என்னமோ தற்போதைய எதிர்க்கட்சிக்கு மட்டும் ஏனோ தெரியவில்லை, வசதியாக மறந்துவிடுகிறார் கள். எல்லா உறுப்பினர்களும் அவரவர் தொகுதியைச் சேர்ந்த மக்களின் குரலாக ஒலிக்கிறார்கள். அப்படி இருக்கும்போது, அதை பொறுமையாக கேட்டு, அதற்குப் பொறுப்பாகப் பதில் அளிப்பதுதான் உண்மையான தலைமைப் பண்பு.
இவ்வாறு அவர் பேசினார்