

சென்னை,
மவுன முதல்-அமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும் என உதயநித் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
முதல்-அமைச்சருக்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதல்-அமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.