“முதல்-அமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்..?” - இன்பதுரை எம்.பி. கேள்வி

பாதுகாப்பு வளையத்திற்குள் அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

அதிமுக எம்.பி. இன்பதுரை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

Core Cell உள்ளிட்ட பல அடுக்கு அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல்-அமைச்சர் விஜய் தனது தனிப்பட்ட பாதுகாவலருடன் வலம் வருவது ஏன்..?

மாநில காவல் துறையினர் வழங்கும் பாதுகாப்பு மீது முதல்-அமைச்சருக்கே முழு நம்பிக்கை இல்லையா?

அரசுப் பாதுகாப்பு அமைப்புகளைச் சாராத ஒருவர், 'பாதுகாவலர்' என்ற பெயரில் அவரது நிழலாகத் தொடர்ந்து செயல்படுவது பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு (Security Protocols) ஏற்புடையதா?

அதிகாரப்பூர்வ பாதுகாப்பு வளையத்திற்குள் (Access Control Zone) அவர் எந்த விதிமுறையின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்?

பாதுகாப்பு மற்றும் தகவல் பாதுகாப்பு (Information Security) தொடர்பான இந்த முக்கியமான கேள்விகளுக்குத் தமிழக அரசு விளக்கம் அளிக்குமா?

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com