அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?-ஆ.ராசா எம்.பி. கேள்வி

அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்? என ஆ.ராசா எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
அதானி விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் காப்பது ஏன்?-ஆ.ராசா எம்.பி. கேள்வி
Published on

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி புதுக்கோட்டையில் திருக்கோகர்ணத்தில் தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் துணை பொதுசெயலாளர் ஆ.ராசா எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா காலம், மழை வெள்ளம் என பல்வேறு இடர்பாடுகளை முன்னின்று எதிர்கொண்டு தீர்த்து வைத்தார். அவர் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற போது ரூ.6 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருந்தது.

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கவில்லை, கருணாநிதிக்கு ஏன் ரூ.80 கோடியில் நினைவு சின்னம் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். தமிழகத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழக மக்களுக்கு பல நல்ல திட்டங்களுக்கு கையெழுத்திட்ட கருணாநிதிக்கு பேனா சின்னம் வைக்க கூடாதா?. வறுமை கோர்ட்டிற்கு கீழ் உள்ளவர்களின் சதவீதம் தமிழகத்தில் தான் குறைவு.

அதானி விவகாரத்தில் ரூ.10 லட்சம் கோடி முறைகேடு நடந்தது குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பினர். அவர் பதில் அளிக்காமல் மவுனம் காப்பது ஏன்?. அமலாக்க துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை ஆகியவற்றுக்கு பயந்து மம்தா பானர்ஜி, சந்திரசேகரராவ், ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா, பஞ்சாப் முதல்-மந்திரிகள் யாரும் பேசவில்லை. இவ்வளவு பெரிய ஊழலை தட்டிக்கேட்ட ஒரே இயக்கம் திராவிட முன்னேற்ற கழகம் தான். அதன் தலைவர் மு.க.ஸ்டாலின். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com