ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ் காவிரி விவகாரத்தில் பேசாதது ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி

தவெகவினரின் அடாவடியால் தமிழ்நாட்டில் மிக மிக மோசமான சூழல் நிலவுகிறது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் பேசாதது ஏன்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
Published on: 

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தவெகவின் 6 மாத ஆட்சியை மக்கள் எள்ளி நகையாடுகின்றனர். தவெகவினர் அடிக்கும் கூத்தை பார்த்து மக்கள் எள்ளி நகையாடும் சூழல்தான் நிலவுகிறது. தவெக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அந்த கட்சியை சேர்ந்தோரின் அடாவடி எல்லை மீறிச் செல்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் சீண்டல்கள்.

எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறி என குற்றங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது

காவிரி விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் விஜய் வாய்திறந்து பேசுவதே கிடையாது. டெல்லியில் கர்நாடக முதல்-மந்திரியை சந்தித்தபோது காவிரி விவகாரம் குறித்து முதல்-அமைச்சர் பேசியிருக்கலாம்.

தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத ஒரே முதல்-அமைச்சர் விஜய்தான். இதற்கு முன்பிருந்த முதல்-அமைச்சர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து மக்கள் பிரச்சினைகளுக்கு பதில் சொல்வர்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் காங்கிரஸ், மக்கள் பிரச்சினை குறித்து பேசாதது ஏன்? காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறை இல்லை; ஏன் பாரபட்சம் பார்க்கிறது? காவிரியில் தமிழ்நாட்டுக்கான பங்கையே கேட்கிறோம் என்றார்.

X