

நெய்வேலி,
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து வி.சி.க. தலைவர் திருமாவளவன் எம்.பி. பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
வி.சி.க. இருக்கும் கூட்டணிதான் வெற்றி பெறும். நண்பர் விஜய் மீது நமக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. கட்சி ஆரம்பித்த அவரை முதல் முதலில் வரவேற்றது திருமாவளவன் தான். அவர் நோக்கம் சரியாக இல்லை. கட்சி தொடங்கிய நாளிலி ருந்து தி.மு.க.வை வீழ்த்துவேன், தி.மு.க. கூட்டணியை வீழ்த்து வேன் என்று கூறுகிறார்.
தி.மு.க.வையும், தி.மு.க. கூட்டணியை யும் தோற்கடித்து யாரை ஆட்சியில் அமர வைக்கப்போகிறீர்கள். ஒன்றை மட்டும் கூறுகிறேன். உங்களால் முதல்-அமைச்சராக முடியுமா?, நீங்கள் முதல்-அமைச்சராக முடியுமா?, எதற்காக தி.மு.க.வை வீழ்த்த துடிக்கிறீர்கள். இதைத்தான் விஜய் கிட்ட நான் எழுப்புற கேள்வி. மறைமுகமாக அவர் யாருக்கு உதவி செய்ய துடிக்கிறார்.
தி.மு.க.வுக்கு கிடைக்கின்ற வாக்குகளை பிரித்து தி.மு.க. கூட்டணிக்கு கிடைக்கின்ற வாக்குகளை பிரித்து பா.ஜனதாவுக்கு கொடுக்கிறார். ஒரு ஓட்டு கூட விஜய்க்கு செல்லக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.