ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில் பெயரிடப்படாத எஃப்ஐஆராக இருப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி

ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில் எஃப்ஐஆரில் ஏன் ஒருவரை கூட சேர்க்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ஆர்.கே. நகர் தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரத்தில் பெயரிடப்படாத எஃப்ஐஆராக இருப்பது ஏன்? உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

சென்னை,

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் நடந்தபொழுது பணப்பட்டுவாடா செய்யப்படுகிறது என புகார்கள் எழுந்தன. இதில் ஆளுங்கட்சி சார்பில் ரூ.79 கோடிக்கு மேல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் இதுதொடர்பாக அபிராமபுரம் போலீசில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக தேர்தல் நிறுத்தப்பட்டு பின்னர் மறுதேர்தல் நடந்தது.

இந்த நிலையில் இதுபற்றிய வழக்கு விசாரணையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், பணப்பட்டுவாடா புகாரில் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 3பேரின் பெயர்கள் உள்ளன. அப்படி இருந்தும் பெயரிடப்படாத எஃப்ஐஆராக இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளனர்.

வருமான வரித்துறை அளித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூவரின் பெயரை ஏன் அடையாளம் காண முடியவில்லை? என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுபற்றி தேர்தல் ஆணையம், தமிழக அரசு வருமானவரித்துறை பதிலளிக்க வேண்டும் என அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com