யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி

யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.
யூடியூப்-யை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரை கிளை கேள்வி
Published on

மதுரை,

யூடியூப்பில் தவறான பதிவுகள் வெளிவருவது குறித்த வழக்கு ஒன்று ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதி புகழேந்தி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையில் நீதிபதி புகழேந்தி பேசியதாவது:

யூடியூப்பை பார்த்து சாராயம் காய்ச்சுவது, துப்பாக்கிச் செய்வது போன்று பலர் சாட்சி தெரிவித்துள்ளனர். அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவர் தவறு செய்ய துணைபுரிந்தால் சட்டப்படி யூடியூப்பும் குற்றவாளிதான். தவறான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுவதில் யூடியூப் நிறுவனமும் உடந்தையா? யூடியூப்பிற்கு ஏன் தடை விதிக்க கூடாது?

யூடியூப்பில் வெடிகுண்டுகள் தயாரிப்பது போன்ற வீடியோக்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? யூடியூப்பில் சில நல்ல விஷயங்கள் உள்ளன. இருப்பினும், இதுபோன்ற பதிவுகளை தடை செய்ய வேண்டும்.

வெளி மாநிலங்களில் இருந்து தேவையற்ற பதிவுகளை தடுக்க அரசிடம் என்ன திட்டங்கள் உள்ளன? யூடியூபில் வரும் தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டாமா? தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன? இது குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை சேகரித்து ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com