விஜய்யின் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை எடுத்தது ஏன்? கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக பேட்டி

தவெக அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். அதனுடன் கூட்டணி இல்லை என்று தெரிவித்தனர்.
விஜய்யின் தவெகவுக்கு  ஆதரவு என்ற முடிவை எடுத்தது ஏன்? கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக பேட்டி
Published on

சென்னை,

விஜய்யின் தவெகவிற்கு சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. .இதையடுத்து செய்தியாளர்களுக்கு கூட்டாக வீரபாண்டியன் மற்றும் சண்முகம் பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது: தவெக அரசுக்கு வெளியில் இருந்து அதரவு அளிக்கிறோம். மக்கள் ஜனநாயகத்தை முன்மொழிந்து இருக்கிறார்கள். நாங்கள் வழிமொழிந்து இருக்கிறோம். ஜனநாயகத்திற்கு மக்கள் ஆதரவு அளித்த நிலையில் தவெகவை ஆதரிப்பது என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தேர்தலில் தோல்வி அடைந்த போதும் ஒன்றிய பாஜக அரசு கொல்லைப்புறம் வழியே நுழைய முயற்சி செய்கிறது. இன்னொரு தேர்தலை தவிர்க்க, கவர்னர் ஆட்சி , பாஜக வருகையை தடுக்க தவெகவை ஆதரிக்கிறோம். தமிழ்நாட்டில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு அரசு அமைய வேண்டும் என்பது அவசியம். மத்திய பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முற்படும் போது திமுகவுடன் இணைந்து போராடுவோம். தவெக அரசுக்கு மட்டுமே ஆதரவு அளிக்கிறோம். அதனுடன் கூட்டணி இல்லை” என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com