

சென்னை,
தமிழகத்தில் நிலவி வரும் மின்தட்டுப்பாட்டை போக்க வெளிச்சந்தையில் இருந்து 4,500 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது. வரும் 12-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறியதாவது:-
மத்திய தொகுப்பில் இருந்து வரவேண்டிய 3000 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்கு கிடைக்கவில்லை. பீக் ஹவர்சில் மின்சாரத் தட்டுப்பாடு இருக்கக் கூடாது என்பதற்காக வெளிச்சந்தையில் 4,500 மெகாவாட் கொள்முதல் செய்யப்படுகிறது. அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் மின் தேவை அதிகரிக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பீக் ஹவர்சில் தற்போது 3000 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக தேவைப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதம் வரை மின் தேவை அதிகமாக இருக்கும். செவிலியர்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கவில்லை என்பது தவறான தகவல். செவிலியர் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு என்ன வேலை..?. இவ்வாறு அவர் கூறினார்.