ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? - தமிழக அரசு விளக்கம்

மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000 வரவு பல்வேறு வகைகளில் உரிமைத் தொகை உதவும் என பெண்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ரூ.5,000 முன்பே  வரவு வைக்கப்பட்டது ஏன்?  - தமிழக அரசு விளக்கம்
Published on

சென்னை,

மகளிர் உரிமை தொகை பெறுவோருக்கு இன்று காலையிலேயே அவரவர் வங்கி கணக்கில் 5,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டதால் இல்லத்தரசிகள் செம குஷியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். கோடைகாலத்திற்கு சுற்றுலா சென்று வர இப்போதே கணக்குபோட்டுவிட்டனர். ஒரு சில இல்லத்தரசிகள் கோடை காலத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

இந்தநிலையில், ரூ.5,000 முன்பே வரவு வைக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து அரசுதரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில்,

* மே மாதம் வரை மட்டுமே இந்த ஆட்சிக்கான அதிகாரம் என்பதால் அடுத்த 3 மாதங்களுக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.

* இலவசங்கள் தொடர்பான வழக்கு மார்ச் மாதம் முதல் வாரத்தில் விசாரணைக்கு வருவதால் முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது.

* பிப். 15 ஆம் தேதி ஞாயிறு என்பதாலும், பிப்.14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதாலும் பிப்.13 ஆம் தேதியே ரூ.5,000 வரவுவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com