குமரியில் பரவலாக மழை

குமரியில் பரவலாக மழை
குமரியில் பரவலாக மழை
Published on

நாகர்கோவில், 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகர்கோவில் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்தது. விடிய, விடிய விட்டு விட்டு மழை பெய்து கொண்டிருந்தது. நாகர்கோவிலில் நேற்று காலையிலும் மழை இருந்தது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

பேச்சிப்பாறை அணை- 1, பெருஞ்சாணி அணை- 1, மாம்பழத்துறையாறு அணை-6.8, முக்கடல் அணை- 4.2, பூதப்பாண்டி- 7.2, கன்னிமார்- 9.4, கொட்டாரம்- 1.8, மயிலாடி- 3.6, நாகர்கோவில்- 14, தக்கலை- 3, குளச்சல்- 3.6, இரணியல்- 8.4, பாலமோர்- 7.2, கோழிப்போர்விளை- 3.4, அடையாமடை- 3, குருந்தன்கோடு- 6.4, முள்ளங்கினாவிளை- 6.4, ஆனைக்கிடங்கு- 5.2 என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது.

இந்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 472 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 41 அடியை நெருங்கியுள்ளது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 153 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 375 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 60.50 அடியாக உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com