

திருக்கடையூர்:
திருக்கடையூர் -ஆக்கூர் பகுதியில் நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தின் தாக்கம் ஓரளவு குறைந்தது. திருக்கடையூர், ஆக்கூர், பிள்ளைபெருமாநல்லூர், டி.மணல்மேடு, கிள்ளியூர், கண்ணங்குடி, வளையல் சோழகன், காடுவெட்டி, நடுவலூர், ரவணயன்கோட்டகம் நட்சத்திரமாலை, ஆக்கூர், மடப்புரம், கிடங்கல், அன்னப்பன்பேட்டை, தோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர். திடீரென நேற்று பெய்த மழையால் பருத்தி செடியை தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. இதனால் பருத்தி சாகுபடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.