திருமருகல் பகுதியில் பரவலாக மழை

திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருமருகல் பகுதியில் பரவலாக மழை
Published on

திருமருகல் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் பகலில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது.

இந்த நிலையில் திருமருகல் ஒன்றியத்தில் பெரும்பாலான இடங்களில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. திருமருகல், அண்ணாமண்டபம், திருக்கண்ணபுரம், திருச்செங்காட்டங்குடி, போலகம், திருப்புகலூர், சியாத்தமங்கை, திட்டச்சேரி, கட்டுமாவடி, ஆதினங்குடி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. வெயிலின் தாக்கத்தினால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் இந்த மழையால் வெப்பம் தணிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

திடீர் மழை குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாசனத்திற்கு தேவையான தண்ணீர் கிடைத்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com