சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை

சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மழை
Published on

சென்னை,

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது, இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக்கூடும். இதனால் தமிழத்தில்13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. சென்னையில் மேம்கு மாம்பலம், கிண்டி, தாம்பரம், தியாகராய நகர், சைதாபேட்டை, நங்கநல்லூர், மீனம்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், அனகாபுத்தூர் மற்றும் வண்டலூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், முகப்பேர், மதுரவாயல், போரூர், கொரட்டூர், பூவிருந்தவல்லி, குன்றத்தூர், திருவேற்காடு, மாங்காடு ஆகிய பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது.

அதைபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, திருமயம், ஆலக்குடி, கீரமங்கலம் போன்ற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் விழுப்புரம், செஞ்சி, விக்கிரவாண்டி, திண்டிவனம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.மதுரை மாவட்டத்தில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கீழவளவு, தும்பைபட்டி மற்றும் தெற்கு தெரு ஆகிய சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com