

சென்னை,
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. மேலும் பல இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு தெரிவித்திருந்தது.
அதன்படி, தமிழகத்தில் இன்று காலையில் இருந்து பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் லாகுடி, புள்ளம்பாடி, கல்லக்குடி, மண்ணச்சநல்லூர், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்மழை பெய்து வருகிறது.
அரியலூர், கீழப்பழவூர், மேலப்பழவூர், வாரணவாசி, வி.கை காட்டி உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், மன்னார்குடி, விளமல், தேவகண்டநல்லூர், அடியக்கமங்கலம், குளிக்கரை, அம்மையப்பன் பகுதிகளில் மழை பெய்கிறது.
நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், தோப்புத்துறை, அகஸ்தியம்பள்ளி, நெய்விளக்கு, தேத்தாகுடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர், சித்திலிங்கமடம், புதுப்பாளையம், மெய்யூர் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.