கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி - பரபரப்பு தகவல்

தென்காசி சாலையில் உள்ள 26 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை தீர்த்துக்கட்டிய மனைவி - பரபரப்பு தகவல்
Published on: 

தென்காசி,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்த பண்பொழி அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த 10-ந் தேதி ஆண் ஒருவர் பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆனால் இறந்தவர் யார்? என்பது குறித்து இலத்தூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் துணை சூப்பிரண்டு அதியமான் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், கருப் பசாமி பாண்டியன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளியை தேடி வந்தது.

காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா

பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள 26 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில் சந்தேகிக்கும் வகையில் 2 முறை அந்த பகுதியில் வந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அந்த கார் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லி புத்தூரை சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த வாடகை காரில் கடந்த 10-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அப்துல் ரகுமான் (வயது 50) என்பவரை, அதே பகுதியில் வசிக்கும் தென்காசி மாவட்டம் தைக்கா தெருவை சேர்ந்த இசை இந்திரகுமார் (36) என்பவர் பண்பொழி பகுதிக்கு அழைத்து சென்று கொலை செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.

கள்ளக்காதல்

உடனடியாக இசை இந்திரகுமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அதாவது, அப்துல் ரகுமான் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடைகளை அடைக்க பயன்படும் ரோலிங் ஷட்டர் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். இவருக்கு அம்சா நிஷா (43) என்ற மனைவி யும், 2 மகன்களும் உள்ளனர்.

அதேபகுதியில் இசை இந்திரகுமார் வேலை பார்த்து வரும் ஓட்டலுக்கு அப்துல் ரகுமான் குடும்பத்துடன் அடிக்கடி சென்று சாப்பிடுவார். அப்போது இசை இந்திரகுமாருக்கும், அம்சா நிஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக அப்துல் ரகுமான் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இதனால் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருப்பதாக கருதி அவரை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

2 பேர் கைது

அதன்படி கடந்த 10-ந் தேதி, பண்பொழி-தென்காசி சாலையில் உள்ள தனது நண்பரின் தோட்டத்தில் பம்புசெட் கட்டிடத்திற்கு ரோலிங் ஷட்டர் அமைக்க வேண்டும் என்று கூறி அப்துல் ரகுமானை, இசை இந்திரகுமார் வாடகை காரில் அழைத் துச் சென்றுள்ளார். அவர்களை இறக்கிவிட்டு டிரைவர் காரை எடுத்துச்சென்றுவிட் டார். இதையடுத்து ரோலிங் ஷட்டருக்காக அந்த இடத்தை அளந்து கொண்டிருந்தபோது அருகில் கிடந்த இரும்புக் கம்பியால் அப்துல் ரகுமானின் தலையின் பின்பகுதியில் இசை இந்திரகுமார் தாக்கினார்.

அதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அவர் மீது கல்லை தூக்கி போட்டதாக கூறப்படுகிறது. இதில் அப்துல் ரகுமான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதையடுத்து இசை இந்திரகுமார் அங்கிருந்து நடந்து சென்று பஸ் ஏறி தப்பிச் சென்றது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக இசை இந்திரகுமார், அம்சா நிஷா ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து இசை இந்திரகுமாரை பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷாவை கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைத்தனர். கடையநல்லூர் அருகே கணவனை, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com