

வேலூர்,
ஆந்திர மாநிலம், குப்பம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 29). பெங்களூருவில் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அப்போது அதேப குதியில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவாஜியின் மகள் மோனிஷா (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண் டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள், 4 வயதில் ஒரு மகன் உள்ளனர்.
கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தைகளை மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் தனியாக விட்டு அவர் மட்டும் பெங்களுருவுக்கு வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலை யில் கடந்த 31-ந் தேதி இரவு கிருஷ்ணமூர்த்தி கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டார். அவர் ரத்தவாந்தி எடுத்து இறந்ததாக அவருடைய மனைவி மோனிஷா கூறினார். ஆனால் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோனிஷாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் அவர் தனது கணவனை கழுத்தை இறுக்கி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். மேலும் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து மோனிஷா, அவருடைய கள்ளக்காதலன் அன்பழகன் (31) அவரது நண்பர் சுப்பிரமணி (41) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசில் அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன் (31) என்பவருக்கும், மோனிஷாவிற்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி 2 ஆண்டுகளாக பழகி வந்துள்ளனர். கடந்த 3 மாதத்திற்கு முன்பு கள்ளக்காதல் விவகாரம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரிய வரவே பெங்களூரில் இருந்து வந்த அவர் மனைவியை கண்டித்து உள்ளார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை.
கிருஷ்ணமூர்த்திக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கடந்த 3 மாதமாக வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், மனவேதனையில் இருந்த மோனிஷா கணவன் தன்னை தினமும் அடித்து துன்புறுத்துவதாக தனது கள்ளக்காதலனிடம் கூறி அழுது புலம்பியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ணமூர்த்தி குடித்து விட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட தாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனது கள்ளக்காதலனிடம் மோனிஷா கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதலன் அன்பழகன் அன்று மாலை மேல்பள்ளிப்பட்டு கிராமத்திற்கு தூக்க மாத்திரையுடன் வந்துள்ளார். அப்போது, கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மோனிஷாவிடம் மாத்திரைகளை கொடுத்து சாப்பாட்டில் கலந்து கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்து தூங்க வைக்குமாறு கூறியுள்ளார்
அதன்படி இரவு சாப்பாட்டில் தூக்க மாத்திரையை கலந்து கணவனுக்கு கொடுத்துவிட்டு அவரை தூங்க வைத்துள்ளார். பின்னர் கள்ளக்காதலனை தொடர்பு கொண்டு வீட்டுக்கு வரும்படி கூறியுள்ளார். உடனே கள்ளக்காதலன் அன்பழகன் மற்றும் அவருடைய நண்பர் சுப்பிரமணி (41) ஆகிய இரண்டு பேரும் சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள் சென்று தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தியின் கழுத்தை துண்டால் இறுக்கி கொலை செய்துள்ளனர்.
அப்போது வெளியில் இருந்து யாரும் வராதவாறு மோனிஷா வீட்டிற்கு வெளியே நின்று கண் காணித்துள்ளார். கிருஷ்ணமூர்த்தி இறந்ததை உறுதி செய்த 2 பேரும் அங்கிருந்து கிருஷ்ண கிரிக்கு சென்றதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.