கள்ளக்காதலுக்கு இடையூறா செய்கிறாய்..கணவரை பதம் பார்த்த மனைவி

பிரபு வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயந்தி உடன் சரவணன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
கள்ளக்காதலுக்கு இடையூறா செய்கிறாய்..கணவரை பதம் பார்த்த மனைவி
Published on

வேலூர்,

வேலூர் மாவட்டம் சம்பங்கி நல்லூரை சேர்ந்தவர் பிரபு (வயது 35). கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. பிரபுவின் சித்தி மகன் சரவணன் (வயது 30) . இந்த நிலையில் சரவணன் அடிக்கடி பிரபுவின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது பிரபுவின் மனைவி ஜெயந்திக்கும், சரவணனுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. பிரபு வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயந்தி உடன் சரவணன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இந்தநிலையில் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் பிரபுவிக்கும் தெரிய வந்தது. பிரபு கள்ளக்காதலை கைவிடும்மாறு எச்சரித்து வந்தார். இருப்பினும் பிரபுவின் எச்சரிக்கையை ஜெயந்தி கண்டுகொள்ளவில்லை.

கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்து கட்ட வேண்டும் என ஜெயந்தி சரவணனிடம் தெரிவித்தார். சரவணனும் பிரபுவை கொலை செய்ய ஒப்புக்கொண்டார்.

அதன்படி கடந்த 21-ம் தேதி பிரபு மது போதையில் தள்ளாடிபடியே வீட்டிற்கு வந்து கிழே விழுந்தார். வீட்டில் இருந்த சரவணன் மற்றும் ஜெயந்தி இருவரும் இதனை தனதுக்கு சாதகமாக பயன்படுத்துக்கொண்டனர்.

ஜெயந்தி கணவரின் உடல் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார். அப்போது எங்களது கள்ளக்காதலுக்கு இடையூறா செய்கிறாய் என திட்டி தீர்த்துள்ளார். சரவணன் பிரபுவின் கழுத்தை இறுக்கி கொலை செய்தார். கணவர் குடிபோதையில் இருப்பதை அறிந்து அவரை ஜெயந்தி பதம் பார்த்து கொலை செய்துள்ளார். பின்னர் ஜெயந்தி தனது கணவர் மது போதையில் தவறி விழுந்து விட்டதாக கூறி அவரை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.

டாக்டர்கள் பிரபுவை பரிசோதித்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பிரபுவின் பிரேத பரிசோதனையில் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்ததற்கான காயங்கள் இருந்தன. சந்தேகம் அடைந்த போலீசார் ஜெயந்தியை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்ததால் சரவணனுடன் சேர்ந்து கணவரை கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். போலீசார் ஜெயந்தி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com