

சேலம்,
ஓமலூர் அருகே தொழில் அதிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சின்னபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பூபதி (வயது 45). இவர், சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே வேலகவுண்டனூர் எஸ்.கே.நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இவருக்கு சுஜிதாஸ்ரீ (31) என்ற மனைவியும், ஸ்ரீராம் (12) என்ற மகனும், சாய்ஸ்ரீ (10) என்ற மகளும் உள்ளனர். தொழில் அதிபரான பூபதி. செங்கல், சிமெண்டு கற்கள் வாங்கி விற்பனை செய்து வந்தார்.
இதற்கிடையே நேற்று அதிகாலையில் சுஜிதாஸ்ரீ, பூபதியின் தங்கை பூங்கொடியை செல்போ னில் தொடர்பு கொண்டு பதறியபடி பேசினார். அப்போது, மகன் ஸ்ரீராமுக்கு உடல்நிலை சரி யில்லை. எனவே ஆட்டுக்காரனூர் சரபங்கா ஆற்றுப்பகுதியில் ஒருவரிடம் மந்திரித்து கயிறு கட்டுவதற்காக வந்தோம். அப்போது சிலர் வந்து, உங்கள் அண்ணனை வெட்டிக்கொலை செய்து விட்டு என்னுடைய நகையை பறித்து விட்டு தப்பி சென்று விட்டனர் என்று அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.
உடனே ஓமலூர் போலீசாருக்கு பூங்கொடி தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் சண்முகம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு காரின் முன் இருக்கையில் சாய்ந்த நிலையில் பூபதி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். பின்னர் போலீசார், பூபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்தனர். இந்த கொலை தொடர்பாக பூபதி தங்கை பூங்கொடி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.
பூபதி உடலில் இருந்த வெட்டுக்காயங்கள் அரிவாளால் வெட்டியது போன்று இல்லை. மாறாக அரிவாள்மனையால் வெட்டியது போன்று இருந்துள்ளதாக தெரிகிறது. காரில் வைத்து கொலை நடந்தது போன்ற எந்தவொரு தடயங்களும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் பூபதி கொலை செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் சுஜிதாஸ்ரீயின் நகை பறிக்கப்பட் டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு சுஜிதாஸ்ரீக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.
எனவே வேறு எங்காவது கொலை செய்து விட்டு அவரது உடலை இங்கே கொண்டு வந்து வைத்து சுஜிதாஸ்ரீ நாடகம் ஆடுகிறாரா? என்ற போலீசாரின் சந்தேக பார்வை சுஜிதாஸ்ரீ மீது திரும்பியது. அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து போலீசார் சுஜிதாஸ்ரீயிடம் விசாரணை நடத்தியதில் அவர் கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவரை குத்திக்கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது.
சுஜிதாஸ்ரீக்கு ஏற்கனவே பல்வேறு நபர்களுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. சுஜிதாஸ்ரீக்கு திருமணம் ஆகாத வாலிபர்களையே பிடிக்குமாம். கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர்களை வீட்டிற்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பாராம்.
மேலும் தற்போது அவரது வீட்டிற்உ எதிர் வீட்டில் குடியிருக்கும் பெங்களூரில் பணியாற்றும் ஐடி ஊழியரான சந்தோஷ் ராஜ் என்ற திருமணம் ஆகாக வாலிபர்களுடன் கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில் இருந்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவருடனும் அவ்வபோது உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இந்த கள்ளக்காதல் விவகாரம் பற்றி தெரிந்ததும் சுஜிதாஸ்ரீயை, பூபதி கண்டித்து உள்ளார். இது தொடர்பாக அடிக்கடி கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இதேபோன்று நேற்று முன் தினம் இரவும் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது சுஜிதாஸ்ரீ தனது கணவர் பூபதியை பிடித்து கீழே தள்ளி உள்ளார். இதில் தலையில் அடிபட்டு பூபதி மயங்கி உள்ளார்.
இதனையடுத்து சுஜிதாஸ்ரீ கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜுவுக்கு போன் செய்து வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் சுஜிதாஸ்ரீ மற்றும் அவரது கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜ் இருவரும் பூபதியை கத்தியால் பல்வேறு இடங்களில் குத்தி கொலை செய்தனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட பூபதி உடலை காரில் முன் சீட்டில் அமர வைத்து ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் சாலையில் ஆட்டுக்காரனூர் என்ற இடத்தில் கிராம சாலையில் சென்று சரபங்கா ஆற்று ஓரமாக நிறுத்தி கோவிலுக்கு செல்லும்போது நகைக்காக கொலை நடந்ததாக தெரிவித்து நாடகமாடியது அம்பலமானது. இதைதொடர்ந்து சுஜிதாஸ்ரீயை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலன் சந்தோஷ் ராஜிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை வழக்கில் இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைக்க உள்ளனர்.