மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றி


Wild boar enters hospital
x

அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அரசு மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இதில் தினந்தோறும் ஏராளமான மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்று மருத்துவமனைக்குள் திடீரென ஒரு காட்டுப்பன்றி புகுந்தது.

பிரசவ வார்டுக்குள் புகுந்த பன்றி அங்கும் இங்குமாக ஓடி அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனையடுத்து, தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பன்றி பிடிப்பவர்கள் அதனை பிடித்தனர். பின்னர் பன்றியை வனத்துறையிடம் ஒப்படைத்தனர். அரசு மருத்துவமனைக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்டுப்பன்றியால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story