களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

களக்காடு அருகே விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
களக்காடு அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம்
Published on

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழவடகரையை சேர்ந்தவர்கள் பெருமாள் மகன் பாலன் (45), இசக்கி மகன் விஜயகுமார் (42). இவர்களுக்கு சொந்தமான விளைநிலங்கள் பூலாங்குளம் பத்துக்காட்டில் உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இவர்களது விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த வாழைகளை தின்று நாசம் செய்தன. காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் 80 வாழைகள் நாசமானது. இவைகள் 6 மாத ஏத்தன் ரக வாழைகள் ஆகும். காட்டு பன்றிகள் அட்டகாசத்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் இருந்து இடம் பெயர்ந்து வந்த காட்டு பன்றிகள் மீண்டும் வனத்திற்குள் செல்லாமல் மலையடிவார புதர்களில் தஞ்சமடைந்துள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். எனவே பன்றிகளை விரட்டவும், பன்றிகளால் நாசமான வாழைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com