கூடலூர் - ஓவேலி சாலையில் காட்டு யானை நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
கூடலூர் - ஓவேலி சாலையில் காட்டு யானை நடமாட்டம்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் வனப்பகுதியில் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் வர தொடங்கி யுள்ளன. கூடலூரில் இருந்து வனத்துறை சோதனை சாவடி, ராக்லேன்ட் தெரு. கெவிப்பாரா வழியாக ஓவேலிக்கு செல்லும் சாலையில் தினமும் இரவில் காட்டு யானை ஒன்று உலா வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் வனத்துறை சோதனை சாவடியில் பணியாற்றும் ஊழியர்கள் காட்டு யானையை விரட்டினாலும், தொடர்ந்து சாலையில் முகாமிடுகிறது. ஓவேலி பேரூராட்சி மக் கள் இரவில் அவசர நேரத்தில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வாகனத்தில் வரும் போது, காட்டு யானை சாலையில் நின்று வழிமறித்து வரு கிறது. இதேபோல் மாலை நேரத்தில் பணி முடிந்து சுற்றுவட்டார கிராம மக்களும் இதே சாலையில் நடந்து செல்கின்றனர்.

இதனால் காட்டு யானையிடம் சிக்கும் அபாயம் உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தனியாக நடந்து செல்லக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் இரவில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகளையும் எச்சரிக்க வருகின்றனர்

X

Daily Thanthi
www.dailythanthi.com