ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை

சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்த காட்டு யானை
Published on

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகங்களில் ஏராளமான யானைகள் உள்ளன. இவைகள் அடிக்கடி உணவு, தண்ணீர் தேடி அருகே உள்ள வனப்பகுதி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை ஆசனூர்

வனப்பகுதியில் இருந்து யானை வெளியேறியது. பின்னர் அந்த காட்டு யானை ஆசனூர்-தாளவாடி சாலைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து சாலையில் அங்கும் இங்கும் நடமாடியது. மேலும் வாகனங்களை வழிமறித்தபடி நடுரோட்டில் நின்றது. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சற்று தூரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். தொடர்ந்து சிறிது நேரம் சாலையில் நடமாடிய யானை தானாக வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. அதன்பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து சென்றனர். இதனால் ஆசனூர்-தாளவாடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகள் எச்சரிக்கை

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, 'யானை போன்ற வனவிலங்குகள் சத்தியமங்கலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அடிக்கடி நடமாடி வருகிறது. எனவே வனப்பகுதி சாலையில் வாகன ஓட்டிகள் மெதுவாக எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்' என அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையே யானையை வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இது வைரலாகி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com