கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் காட்டு யானைகள் முகாம்: வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பலா பழங்களை உண்பதற்காக சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக இப்பகுதிக்கு படையெடுத்து வருகின்றன. இவ்வாறு வந்துள்ள காட்டு யானைகள் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வப்போது உலா வந்த வண்ணம் உள்ளன.
இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்களை துரத்துவதும், சேதப்படுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இந்தநிலையில் மாமரம் பகுதியில் குட்டியுடன் 4 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டு உள்ளன. எனவே, அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் வாகனத்தை இயக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story