கூடலூரில் சாலையில் உலா வந்த காட்டு யானை: மக்கள் அலறியடித்து ஓட்டம்

கூடலூரில் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.
கூடலூரில் சாலையில் உலா வந்த காட்டு யானை: மக்கள் அலறியடித்து ஓட்டம்
Published on

நீலகிரி,

கூடலூரில் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை உலா வந்ததால் நடைபயிற்சிக்கு வந்த மக்கள் ஓட்டம் பிடித்தனர்.

சாலையில் காட்டு யானை

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் காட்டு யானைகள் புகுவது தொடர் கதையாகி வருகிறது. இந்த நிலையில் கூட லூர் கோத்தர் வயல் பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானை ஒன்று 1 பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த காட்டு யானையை வனத்து றையினர் விரட்டியடித்தனர்.

இதன் காரணமாக நடுகூடலூர் வழியாக கெவிப்பாரா எஸ்டேட்டுக்குள் காட்டு யானை நுழைந்தது. பின்னர் அங்கிருந்து கூடலூர் அரசு மேல் நிலைப்பள்ளியின் பின்புறம் முகாமிட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்தனர். பின்னர் வனத்துறையினர் விரைந்து வந்து பட்டாசுகளை வெடித்து காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனால் காட்டு யானை அங்கிருந்து சென்றது.

இந்த நிலையில் ஊட்டிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானை கூடலூர் ராஜகோபாலபுரம் நகருக்குள் உலா வந்தது.

நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் ஓட்டம்

மேலும் நெடுஞ்சாலையின் நடுவே கம்பீரமாக நடைபோட்டபடி அந்த யானை உலா வந்தது. அப்போது சாலையில் நடைபயிற்சிக்காக வந்த பொதுமக்கள் காட்டு யானை வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஊட்டியில் இருந்து வெளிமாநிலத்துக்கு சென்ற சுற்றுலா வாகன ஓட்டிகளும் அச்சமடைந்தனர். இருசக்கர வாகனங்களில் வந்தவர்கள் ஆபத்தை உணர்ந்து வாகனங்களை அங்கேயே போட்டு விட்டு பாதுகாப்பான இடங்களை தேடி ஓடினர். பொதுமக்களும் வந்த வழியாக திரும்பி ஓடினர். பின்னர் காட்டு யானை ராஜகோபாலபுரம் வழியாக கோத்தர் வயலுக்குள் நுழைந்தது. இதனால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும் போது, காட்டு யானை பொதுமக்கள் வளர்த்து வரும் பாக்கு, வாழை உள்ளிட்ட பயிர்களை தின்று பழகிவிட்டது. இதனால் வனத்துறையினர் விரட்டினாலும் ஒவ்வொரு பகுதிக்கு தினமும் இடம் பெயர்ந்து அனைவரையும் சிரமம் அடைய வைத்து வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com