காட்டுயானைகள் அட்டகாசம்

கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் அரசு பள்ளி, வீடு சேதம் அடைந்தது.
காட்டுயானைகள் அட்டகாசம்
Published on

கருமலை எஸ்டேட் பகுதியில் காட்டுயானைகள் அட்டகாசம் செய்தது. இதில் அரசு பள்ளி, வீடு சேதம் அடைந்தது.

காட்டுயானை கூட்டம்

வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் சூடக்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டியுடன் கூடிய 9 காட்டுயானைகள் கொண்ட கூட்டம் முகாமிட்டு இருந்தது.

இந்த கூட்டம் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் பாலாஜி கோவில் சோலை வழியாக நடந்து வந்து கருமலை எஸ்டேட் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.

அறையை உடைத்தது

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்த சத்துணவு மையத்தின் சுவரை உடைத்து தின்பதற்கு பொருட்கள் ஏதும் கிடைக்குமா? என்று துதிக்கையை உள்ளே விட்டு தேடியது. ஆனால் அங்கு எதுவும் கிடைக்காத நிலையில், அருகில் உள்ள தோட்ட உதவி மேலாளரின் வீட்டு சமையலறையை உடைத்தது. தொடந்து உள்ளே இருந்த உணவு பொருட்களை எடுத்து தின்று விட்டு, பொருட்களை கீழே தள்ளி உடைத்து அட்டகாசம் செய்து விட்டு சென்றது.

கண்காணிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வனத்துறையினர் காட்டுயானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

ஆயுத பூஜையுடன் தொடர் விடுமுறை விடப்பட்டு உள்ளதால், வால்பாறை பகுதிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வர தொடங்கி இருக்கின்றனர். இதனால் கூடுதல் வனத்துறையினரை பணியில் அமர்த்தி காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com