தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்

தேயிலை தோட்டங்களுக்குள் 6 காட்டு யானைகள் முகாமிட்டன.
தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் முகாம்: தொழிலாளர்கள் அச்சம்
Published on

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கொலக்கம்பை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அப்பகுதியில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்து, அங்குள்ள பலா மரங்களில் இருக்கும் பலாப்பழங்களை பறித்து தின்று வருகின்றன. இந்தநிலையில் கொலக்கம்பை, கிளிஞ்சடா பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்களுக்குள் 6 காட்டு யானைகள் முகாமிட்டன. இதனால் அப்பகுதி மக்கள், தோட்ட தொழிலாளர்கள் அச்சமடைந்தனர்.

இந்த வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. சாலையோரம் அல்லது தேயிலை தோட்டங்களில் யானைகளை காணும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி செல்பி மற்றும் புகைப் படம் எடுப்பதற்காக யானைகள் அருகே சென்று சத்தம் எழுப்புவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தகவல் அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் அவர்கள், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கவனமுடன் செல்ல வேண்டும் என்றும், யானைகளை பார்த்த உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com